செய்திகள்

12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டம் 91.16 சதவிகிதம் தேர்ச்சி

திருவள்ளூர், ஜூலை 17–

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 18,635 ஆண்களும், 21,469 பெண்களும் ஆக மொத்தம் 40,104 மாணாக்கர்கள் தேர்வு எழுதி 16,367 ஆண்களும், 20,192 பெண்களும் ஆக மொத்தம் 36,559 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்களின் தேர்ச்சி விழுக்காடு 87.83, பெண்களின் தேர்ச்சி விழுக்காடு 94.05, மொத்த தேர்ச்சி விழுக்காடு 91.16 ஆகும். கடந்த 2019 மார்ச் பொது தேர்வு தேர்ச்சி விழுக்காடு 89.49 ஆகும் கடந்த ஆண்டு தேர்வைக் காட்டிலும் 1.67 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று வெளியிட்டு, செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் 104 அரசுப் பள்ளிகளில் 13,633 மாணாக்கர்கள் தேர்வு எழுதி 10,782 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் 79.09 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளி தேர்வர்களில் கண்பார்வையற்றவர் 51, காதுகேளாதோர் 12, ஊனமுற்றோர் மற்றும் இதர வகையினர் 68 ஆக மொத்தம் 131. இதில் தேர்ச்சி பெற்றோர் கண்பார்வையற்றவர் 47, காதுகேளாதோர் 7, இதர வகையினர் 53 ஆக மொத்தம் 117 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புழல் மத்திய சிறையில் 16 தேர்வர்கள் தேர்வு எழுதி 16 தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 103 பள்ளிகள் நூற்றுக்கு நூறு (100%) விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், செவியர், சத்துணவில் மற்றும் தொடர்பியல் ஆங்கில ஆகிய பாடங்களில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 25வது இடத்திலும், இந்த ஆண்டில் 22 இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.

வெற்றிச்செல்வி

இந்நிகழ்வினில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *