செய்திகள்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 14–ந்தேதி வெளியாகிறது

சென்னை, மே 11–

11–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14–ந்தேதி காலை வெளியாகிறது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

அதே போல் நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14ந்தேதி வெளியாகும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ–மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எந்தவித கட்டணமுமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அறிவித்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *