செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகள்

ஈரோடு, பிப். 18

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வினோபாநகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளது. வனத்துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது.

தேர்தலை பொறுத்தவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து ஆசிரியர்கள் கல்வி கற்றுத்தருகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை.

+2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 பேர் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுளளது. தேர்வு மையங்கள் அதிகப்படுத்தவும் ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

பள்ளிக்கு வராத மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் தேர்வு எழுதலாம். எப்போதும் அரசு பள்ளிகளில் 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *