செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலியை சேர்ந்த 108 வயது மூதாட்டி

ரோம், ஜன. 20–கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலியைச் சேர்ந்த 108 வயது மூதாட்டிக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 108 வயதாகும் இத்தாலி நாட்டை சேர்ந்த பாத்திமா நெக்ரெனிக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் 3ஆம் தேதியுடன் அவர் 109 வயதை தொடவிருக்கிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக குணமடைந்தார். இவரை போலவே, ரோம் நகரை சேர்ந்த 90 வயதான சமி மொடியானோ என்பவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகளவில் இதுவரை அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இத்தாலி இருக்கிறது. இத்தாலியில் இதுவரை 11.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *