செய்திகள்

108 பல்வேறு இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள்: தளவாய் சுந்தரம் வழங்கினார்

அஞ்சுகிராமம் பகுதியில்

108 பல்வேறு இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள்:

தளவாய் சுந்தரம் வழங்கினார்

 

கன்னியாகுமரி, ஜூன்.30–

கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக, இசை, நாடகம், நாதஸ்வரம் உள்ளிட்ட 108 கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக, தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகிய பொருட்களை, அஞ்சுகிராமம் வேல் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள இசை, நாடகம், நாதஸ்வரம், கிராமியம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள், திரைப்படக் கலைஞர் பி.டி.செல்வத்தின் கலப்பை மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இக்கலைஞர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக, மிகவும் நலிவுற்ற உறுப்பினர்கள் 108 கலைஞர்களுக்கு கெரோனா நிவாரண உதவியாக, தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகிய பொருட்களை, மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் வழங்கினார்

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் ஈ.நீலப்பெருமாள், குலசேகரப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் சுடலையாண்டி, இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் லட்சுமி சீனிவாசன், மாநில இலக்கிய அணி இணைச்செயலாளர் கவிஞர் எஸ்.சதாசிவம், கிருஷ்ணதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *