செய்திகள்

1000 தொழிலாளர்களுக்கு 10 கிலோ அரிசி: அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்

திருப்பத்தூர், மே 23–

திருப்பத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு தொழில்களை செய்து வரும் 1000 தொழிலாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தன்னுடைய சொந்த செலவில் 10 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், வேன், கார் ஓட்டுநர்கள் நலச்சங்கம், முடிதிருத்துவோர் மற்றும் இசை கலைஞர்கள் நலச்சங்கம், நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம், பூ கட்டுவோர் நலச்சங்கம், காலணி தைப்பவர்கள் நலச்சங்கம், சுமைதூக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம், திருநங்கைகள் நலச்சங்கம், கை ரிக்க்ஷா ஓட்டுநர்கள் நலச்சங்கம், புகைப்பட கலைஞர்கள் நலச்சங்கம், விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவோர்கள் நலச்சங்கம் மற்றும் சலவை தொழிலாளர் நலச்சங்கம் என 12 வகையான தொழில்களை செய்து வரும் 1000 தொழிலாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்கள் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து உணவு அத்தியாவசிய தேவை நிவாரணமாக தன்னுடைய சொந்த செலவில் 10 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் லீலா சுப்பிரமணி, முன்னாள் சர்க்கரை ஆலைத்தலைவர் செல்வம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பூபதி, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் திருப்பதி மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *