செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 100 ரவுடிகள் கைது

காஞ்சீபுரம், மார்ச்.6–-

சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் சமயத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் யாரேனும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறவும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 100 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 45 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டமன்ற தேர்தலின்போது தாங்கள் எந்தவித சட்டம்-–ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட மாட்டோம் என 340 நபர்கள் ஒப்புதல் பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *