வாழ்வியல்

100 வகையான தொழில்கள், முதலீடு, சந்தை வாய்ப்பு பற்றி விளக்கம் – 3

Spread the love

ஜாம், ஜூஸ், ஊறுகாய்கள் தயாரிப்பு

மிக்ஸட் ஜாம், திராட்சை, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், காரட் ஜூஸ் போன்ற பலவகை உறுகாய்கள், எலுமிச்சை, மாங்காய் தொக்கு என பலவகை உணவுப் பொருட்கள் தயாரிப்பு லாபகரமான தொழிலாகும். சிறிய இடம் வாடகைக்குப் பிடித்து அரசு சட்டப்படி கம்பி வலையடித்து, அரசு பதிவு எண் பெ்று சுத்தமாக தயாரிக்க வேண்டும். நீங்கள் தொடங்கும் பகுதியில் என்ன மூலப்பொருட்கள் கிடைக்கிறதோ அதற்கேற்றாற்போல் தயாரிப்பை முடிவு செய்ய வேண்டும். சிறிய பிளாஸ்டிக் கவரிலும் பாட்டில்களிலும் விற்பனை செய்யலாம்.

மொத்த முதலீடு ரூ. 2 லட்சம். 4 பேருக்கு வேலை தரலாம். மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் சம்பதிக்கலாம்.

 

கம்ப்யூட்டர்/டைப்பிங் பயிற்சி மையம்

தமிழ், ஆங்கிலம் டைப்பிங், ஸடெனோகிராபி, கம்ப்யூட்டரில் பல மொழிகள் கற்றுத்தரும் பயிற்சி மையம் தொடங்குவது லாபமாகும். ஒரு அறையில் டைப்ரைட்டர்/கம்ப்யூட்டர்/பிரிண்டரரையும் இன்னொரு அறையை வகுப்பாகவும் பயன்படுத்தலாம். மேலும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தன்னம்பிக்கை கற்றுத் தருதல் என பலவகைகளில் பயன்படுத்தலாம்.

மொத்த முதலீடு ரூ.55 ஆயிரம். 4 பேருக்கு வேலை தரலாம். மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் சம்பாதிக்கலாம்.

 

சிப்ஸ் தயாரிப்பு & ஸ்வீட் ஸ்டால்

உருளைக்கிழங்கு, நேத்திரம் சிப்ஸ் போன்றவை தயாரித்து மொத்த விற்பனை செய்வதும், அங்கேயே ஸ்வீட் ஸ்டால் நிறுவி விற்பதும் லாபகரமான தொழில், சிப்ஸ் போன்றவற்றை மட்டும் தயாரித்து, மற்றவற்றை வாங்கி விற்பனை செய்யலாம். ஃபிரிட்ஜ் மூலம் கூல்டிரிங்ஸ் விற்பனை செய்யலாம். சிப்ஸ் 1, ½, கால் கிலோ என பேக்கிங் செய்து வாகனம் மூலம் குறைந்தது 100 கடைகளுக்கு விற்பனைக்கு போடலாம்.

மொத்த முதலீடு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம். 3 வேலை கொடுக்கமலாம் மாத வருமானமாக ரூ.25 ஆயிரம் சம்பதிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *