செய்திகள்

100 நாளில் திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது: பாஜக மூத்த தலைவர் பாராட்டு

சென்னை, ஆக. 15–

ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை மயிலாப்பூரில் துவங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழ்நாடு முழுக்க பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திட்டத்தை வரவேற்றுப் பேசினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம். பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியுள்ளன. இதில் நல்ல அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி ஆட்சி நடத்தி வருகிறார்கள். எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று திமுக ஆட்சியைப் பாராட்டும் வகையில் பேசி இருந்தார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திமுக அரசை பாராட்டினார். அதில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, தற்போது பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

திமுக அரசு 100 நாட்களில் ஏராளமான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி உள்ளது. இனியும் திமுக அரசு மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 100 நாட்களில் திமுக அரசு மேலும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *