செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 10 பேர் கைது

Spread the love

விழுப்புரம், ஜன.2–

ஆரோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நாவற்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனித்தனியாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதையொட்டி இருதரப்பிலும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது ராஜ்குமார் வாங்கி வைத்திருந்த கேக்கை திடீரென மணிகண்டன் கத்தியால் வெட்டி தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார். இதனை பார்த்ததும் ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து மணிகண்டன் தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

இதில் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட னர். ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், மணிகண்டன் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டார். அங்கு மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தரப்பை சேர்ந்த ராஜதுரை, விக்கி, யுவராஜ் உள்பட 5 பேரையும், ராஜ்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த முத்து, அய்யப்பன், வினோத் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *