செய்திகள்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.1–

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (2-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

3–ந் தேதி மற்றும் 5–ந் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–

வெப்பூர் – 3 செ.மீ., வடபுடுபட்டு, ராயக்கோட்டை, தளி, கொரட்டூர், தென்கனிகோட்டை, ஊத்துக்கோட்டை, தர்மபுரி PTO தலா 2 செ.மீ., கிருஷ்ணகிரி, காட்டுக்குப்பம், செய்யூர், திருத்தணி, டிஜிபி அலுவலகம், பூந்தமல்லி, திருவள்ளூர், தருமபுரி, திருத்தணி, சூலகிரி தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *