செய்திகள்

10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப். 25–

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களில் 5 கோடியை எட்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் 108 ஆம்பிலன்ஸ் மேலாண்மை சேவை ஆண்டு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

5 கோடியை எட்டும்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், மே மாதம் 7 ம் தேதியில் இருந்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 34 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 நாட்களில் 5 கோடியை எட்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளதாகவும், நாளை நடைபெறும் முகாமை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *