சென்னை, மார்ச்.22-–
தேர்தல் நடைபெற உள்ளதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-–மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அடுத்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
+2 மாண வர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவு பெற்றது. 25-ந்தேதி பிளஸ்-1 வகுப்புக்கு தேர்வு நிறைவு பெற உள்ளது. 10–ம் வகுப்புக்கு வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே பள்ளிக்கல்வி இயக்குனர் அறி வொளி, தொடக்கக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-– நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை யிலான மாணவர் களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கள் அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும்.
13-ந்தேதி முதல் மாணவர் களுக்கு கோடை விடு முறை தொடங்கு கிறது. மேலும் ஆசிரியர்கள் 19-ந்தேதியன்று நடைபெற உள்ள தேர்தல் சார்ந்த பயிற்சி கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரி விக்கப் பட்டுள்ளது.