செய்திகள்

1 முதல் 12–ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த உத்தரவு

சென்னை, ஜூன் 14–

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 50 சதவீத பாடங்களும் குறைக்கப்பட்டு இருந்தன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

12–ம் வகுப்புகளுக்கு 20–ந்தேதியும், 11 வகுப்புகளுக்கு 27–ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.