செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை, அக். 31–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்தது. இந்நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்த நிலையில் நேற்றும் இன்றும் ரூ.440 வரையில் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில் இன்று, மேலும் ரூ.160 குறைந்துள்ளது.

பவுனுக்கு ரூ.160 குறைவு

அதன்படி, இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.78.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *