சிறுகதை

சமத்துவம்- ராஜா செல்லமுத்து

ரவி எப்போதும் சமத்துவம் பற்றிப் பேசுவான்.

இந்த நாடு ,ஒரு சகோதர நாடு எல்லா மதத்தவர்களையும் எல்லா சாதிக்காரர்களையும் ஒன்றாகத்தான் மதிக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் மதங்களாக சாதிகளாக பிரிந்து கிடக்கிறார்கள் என்று எல்லோரிடமும் புலம்பித்தீர்ப்பான் ரவி .

அவன் பேசுவதைச் சிலர் ஆமோதிப்பார்கள் . சிலர் எதிர்ப்பார்கள் .

நீங்க சொல்றது சரிதான். எங்க பாத்தாலும் மத சண்டை போட்டுட்டு தான் இருக்காங்க. முதல்ல இருந்த மனிதர்களின் ஒற்றுமை இப்ப குறைஞ்சு போச்சு. நாமளும் தான் இதை பத்தி பேசிகிட்டு தான் இருக்கம். யாரும் நடைமுறைப்படுத்துவது மாதிரி தெரியல. எல்லாம் அரசியல் என்று ரவிக்கு ஆதரவாக பேசினான் ஒரு நண்பன்.

ஆமா நண்பரே முன்னெல்லாம் எல்லா மதத்துக்காரங்களும் ஒன்னாதான் இருப்பாங்க . யாதும் ஊரே யாவரும் கேளிர்னு நம்ம முன்னோர்கள் பாட்டு எழுதி வச்சார்கள். அது இப்ப இல்லையோ அப்படின்னு எனக்குத் தோணுது. எங்க பாத்தாலும் மதம், சாதி சண்டை தான் நடந்துகிட்டு இருக்கு. இத எப்படி தீர்க்கிறது? இதுக்கு என்ன வழி? என்று நானும் யோசனை பண்றேன் .

ஆனா ஏதோ ஒரு பிரச்சனை மறுபடியும் மறுபடியும் வந்து இங்கே பிரச்சனை ஏற்படுத்துவது என்று ரவி சொல்ல அதற்கு அவன் நண்பனும் ஆமா என்றான்.

இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த உதயன்

என்ன ரவி, சாதி மதத்தை பற்றி பேசிட்டு இருக்கீங்களா? என்று சிரித்துக் கொண்டே அவர்கள் முன்னால் வந்தான்.

அதுதான் இப்ப பெரிய பிரச்சனையா இருக்கு.. எல்லா மனுசங்களுக்குள்ளேயும் சாதி மதம் தலை தூக்கி நிக்கிது. இது எப்ப ஒழிய போகுதுன்னு தெரியல என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான் .

அதற்கு பதில் சொல்லாத உதயன் சிரித்தபடி இருந்தான்.

என்ன உதயா நான் சீரியசான ஒரு விசயம் சொல்றேன். நீ சிரிச்சுக்கிட்டே இருக்கியே? என்றான் ரவி

இல்ல ரவி உங்களுடைய அறியாமைய நினைச்சு சிரிச்சேன் என்றான் உதயன்

என்ன அறியாமை என்று கொஞ்சம் முகம் சுளித்து கேட்டான் ரவி.

ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் ஒரு சகிப்புத்தன்மை இருக்குது. ஒரு சமத்துவம் இருக்குது. அதை செயல்படுத்தறது இல்ல; நடைமுறைப்படுத்துவது இல்ல. ஒவ்வொரு மனுசனும் எல்லா சாதி மதமும் ஒன்னுன்னு நினைச்சா நம்மை யாரும் அசைக்க முடியாது என்றான் உதயன்.

அது எப்படி நீ சமத்துவத்த உண்டாக்க முடியும் என்று ரவி மீண்டும் கேட்க

சிரித்துக் கொண்டே ரவியின் செல் போனை வாங்கினான் உதயன்

எதுக்கு என் செல்போனை வாங்குற? என்று உதயன் கேட்க

ஒரு காரணமாகத்தான் என்று வாங்கிய உதயன் ரவியின் காண்டாக்ட்டைத் திறந்தான்

என்ன, என்ன செய்யப் போற உதயா செல்போன்ல என்று ரவி கேட்க

ரவியின் காண்டாக்ட் டில் ஆயிரத்து 500 பேருக்கு மேல் இருந்தார்கள். அதில் கிறிஸ்தவர், முஸ்லிம், இந்து அனைத்து சாதி நண்பர்கள், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அதில் பதியப்பட்டிருந்தன

என்ன பார்த்துட்டு இருக்க? உதயன் என்று ரவி கேட்க

ரவி உன்னுடைய கான்டெக்ட் இவ்வளவு பேர் இருக்காங்க . அந்த 1500 காண்டாக்ட்ல இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் எல்லா சாதிக்காரங்களும் உன்னுடைய செல்போன்லயே இருக்குது. இப்படி ஒவ்வொரு மனுசன் செல்போனையும் திறந்து பாருங்க. எல்லா மதத்தை சேர்ந்த சாதியை சேர்த்த நண்பர்களே இருப்பாங்க. நாம எல்லாம் சமத்துவமா தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.

நமக்குள்ள எதுக்கு பிரிவு? எதுக்கு பிரச்சனை? என்று நெற்றிப்பாெட்டில் ஆணி அடித்தது போல் சொன்னான் உதயன்.

ஆமா இல்ல. எல்லா மனுசங்களுக்குள்ளேயும் ஒரு சமத்துவம் இருக்கத்தான் செய்யுது. அவங்க அவங்க மொபைல் போனை பாருங்க .அப்போ புரியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்படிங்கிற விசயமும் சமத்துவம்னா என்ன? அப்பிடிங்கிர விஷயமும் .

நாம நமக்குள்ள எல்லாத்தையும் வச்சிட்டு அதை வெளியில தேடிட்டு இருக்கோம். அத நடைமுறைப் படுத்தினா எல்லாமே இங்க சாத்தியம் என்று ரவி சொல்ல

அப்பாேது ரவிக்கு முகமது என்ற நண்பன் ஃபோன் செய்தான்.

எங்க இருக்க ரவி . டீ கடைக்கு வா டீ சாப்பிடலாம். உனக்காகத்தான் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காேம் என்று முகமது கூப்பிட ரவி மலைத்துப் போய் நின்றான்.

அங்கிருந்த அத்தனை பேருக்கும் சமத்துவம் என்றால் என்ன என்பது அப்பாேது புரிந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *