செய்திகள் நாடும் நடப்பும்

ஹைட்ராஜன் எதிர்காலம் : இந்தியாவின் முயற்சிகளை உற்றுப் பார்க்கும் உலக நாடுகள்

Makkal Kural Official

நாடும் நடப்பும்


விடுமுறை நாட்கள் வந்து விட்டால் அதிகமாக பேசப்படும் ஒரு சொற்தொடர் ரெயிலில் டிக்கெட் இல்லை! கடந்த 50 ஆண்டுகளில் பல புதுப்புது ரெயில் சேவைகள் மற்றும் அதிவேக ரெயில்கள் அறிமுகமாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் இப்படி ஹவுஸ்புல்லாக ரெயில் சேவைகள் ஓடிக்கொண்டிருப்பது மனதுக்கு இதமாகத் தான் இருக்கிறது.

ரெயில் சேவைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சாமானியனின் வசதிக்காக பொருளாதார ரீதியாய் லாபகரமாக இயங்க வேண்டும் என பார்க்கப்படாமல் நாட்டு மக்களுக்காக ஓடிக் கொண்டிருப்பதும் இன்றைய காலக்கட்டத்தில் ஆச்சரியமானது தான்!

கடந்த 10 ஆண்டுகால காலத்தில் இந்திய ரெயில்வேயில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

தற்போது நாள் ஒன்றுக்கு 4 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 5,300 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இது சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த ரெயில் நெட்வொர்க்குக்கு இணையானது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரெயில் நெட்வொர்க்குக்கு நிகரானது.

கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 20,000 கி.மீ தூரத்துக்குமட்டுமே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. ரெயில்வேயில் தற்போது 100% மின்மயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

நாடு முழுவதும் 300 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 120 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அடுத்த சில மாதங்களில் புதிய ஆட்சியை அமைக்கப்போகும் மத்திய மந்திரி சபை நாட்டின் முதல் ஹைட்ராஜன் வாயு கொண்டு ஓடும் ரெயில் சேவைகள் துவங்கப்பட இருக்கிறது.

கார் மற்றும் ஸ்கூட்டர்கள் எப்படி மின்சார வாகனங்களாக மாறி வருகிறதோ அதே வேகத்தில் ஹைட்ரஜன் கொண்டு ஓடும் வாகனங்கள் நம் மண்ணில் மெல்ல ஓடத் துவங்கி விடும்.

ரெயில்களே இப்படி புதிய எரிவாயுடன் ஓடத் துவங்கி விட்டால் விரைவில் பிற வாகனங்கள், குறிப்பாக செலவு எரிசக்தி கொண்டு ஓட துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.

உலகெங்கும் மிகப்பெரிய புரட்சியை செய்தது என்ஜினின் வருகை தான், அதைக் கடந்த 200 ஆண்டுகளில் எல்லாவித கனரக வாகனங்கள், இயந்திரங்களில் உந்துதல் சக்தியாய் இருப்பதை அறிவோம்.

அந்த என்ஜின்களின் சக்தியை புரிந்து கொண்ட நாம் அது விளைவித்து வரும் ஆபத்தையும் பாதகமான பின்விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோம்.

அந்த என்ஜின்கள் கரி, பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு இயங்கி வருவதால் அதன் கரும்புகை வெளியேற்றம் நமது பூமிக்கே பெரும் சவாலாக மாறி விட்டது.

புவி வெப்பமயம் ஆபத்தால் நம் பூமியின் நிலபரப்பை ஆதிகம் செலுத்தும் நீர் வற்ற ஆரம்பித்து விட்டது. ஆக கரும்புகை மனிதகுலத்திற்கே பகையாக மாறி விட்டது.

இதற்கான விடை கரும்புகை கட்டுப்படுத்தலில் மட்டுமே இருக்கிறது. கரி மற்றும் பெட்ரோல், டீசல் உபயோகத்திற்கு முக்கிய காரணம் அது மிக மலிவாக கிடைப்பதால் தான்!

அதையும் விட குறைந்த செலவில் உந்துதல் சக்தியை தரும் எல்லா அம்சமும் ஹைட்ராஜன் வாயுவில் இருப்பதுடன் அது இயற்கையாகவே பெரிய அளவில் நம்மை சூழ்ந்தும் இருக்கிறது.

மேலும் ஹைட்ராஜன் வாயுவை தயாரிப்பதும் மிக எளிது, மிக மலிவானதும் தான். ஆகவே விரைவில் நாம் ஹைட்ராஜன் புரட்சியை ஏற்படுத்த விரைவில் முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி விட்டோம்.

ஆக ரெயில்கள் குறைந்த செலவில் பயணத்தை மேற்கொள்ள வசதியை தருவது போல் பிற சாலை போக்குவரத்து சேவைகளும் கப்பல்களும் ஹைட்ரஜனில் இயங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காந்தம், செமிகண்டக்டர்கள் எல்லாம் இன்றைய நவீன தொழில்நுட்ப வல்லமையுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டது, ஆக ஹைட்ரஜன், செமிகண்டக்டர்கள் போன்ற துறைகளில் நாம் செய்துள்ள முதலீடுகள் விரைவில் பயன் தரப்போகிறது,

நம் வாழ்க்கையில் மேலும் பல புதுப்புது அற்புதங்கள் தோன்றப் போவதும் உறுதியாகும்.

#hydrogen #h2 #trains #railway #indianrailways

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *