செய்திகள்

ஹில்சிட்டி அரிமா சங்கம் சார்பில் விஎல்பி ஜானகியம்மாள் பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் “ஸ்மார்ட் கிளாஸ்”

கோவை, பிப். 12

கோவை ஹில்சிட்டி அரிமா சங்கத்தின் சார்பில் விஎல்பி ஜானகியம்மாள் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் அர்ப்பணிக்கப்பட்டது.

கோவை அரிமா மாவட்டம் ஹில்சிட்டி அரிமா சங்கத்தின் சார்பில் 4வது நிரந்தர சேவை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கிளாஸ், கோவைப்புதூரில் உள்ள விஎல்பி ஜானகியம்மாள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஹில்சிட்டி அரிமா சங்கத்தின் தலைவர் பிரியா கிரி தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரிமா மாவட்டத்தின் ஆளுநர் பி.கே.ஆறுமுகம் கலந்து கொண்டு 4வது நிரந்திர சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் இப்பள்ளிக்கு எல்சிடி புரோஜெக்டர், சின்னத்திரை கம்ப்யூட்டர் மற்றும் ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் என ரூ.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.

கல்வித்திறன் மேம்படும்

இதற்கான அனைத்து ஸ்பான்சர்களையும், ஹில்சிட்டி அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் ஸ்ரீநிவாச கிரி மற்றும் அரிமா பி.எஸ்.குட்டன் ஆகியோர் ஏற்று வழங்கினர்.

இத்திட்டத்தின் மூலம் பள்ளியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி கொள்ள முடியும் என பிரியா கிரி கூறினார்.

முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் திருச்செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பிரபாகரன், ஸ்ரீதர், துரைபாண்டியன், ஆத்மா சம்பத், சரவணராஜா, விஜயலட்சுமி உள்பட அரிமா நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *