செய்திகள்

ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

கோவை, மார்ச் 30

மனிதநேயமிக்கவரும், ஆன்மிகத் தலைவருமான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு மைசூர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.

மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த மார்ச் 17 ந் தேதி நடந்த நிலையில் அதன் துணை வேந்தரான ஹேமநாத குமார், கேரளாவில் கொல்லத்தில் அமைந்துள்ள அமிர்தபுரி ஆஸ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை அதிகார பூர்வமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே, கேரள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாதவன் பிள்ளை, மைசூர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் லிங்கராஜ காந்தி மற்றும் பல்வேறு முக்கி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தன்னலமற்ற சேவை

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி,

இந்த கவுரவத்தை எனக்கு வழங்கி யதற்காக மைசூர் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர் மற்றும் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர்கள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மை காரணமாகத்தான் மாதா அமிர்தானந்தமயி மடத்தால் இந்த சமூகத்துக்கு சேவைகளைச் செய்ய முடிகிறது. அதனால் இந்த கவுரவத்தை அவர்களின் ஆழ்ந்த நேர்மை மற்றும் நல்லெண்ணத்துக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

துணை வேந்தர் புகழாரம்

மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான ஹேமந்த குமார் பேசும்போது, கடந்த 4 தசாப்தங்களாக ஆன்மிகக் கல்வி முதல், மனிதநேய உதவிகள் வரை இந்த உலகுக்கு பல்வேறு சேவைகளைச் செய்துவரும் தேவிக்கு இந்த கவுரவ பட்டத்தை வழங்குவதன் மூலம் மைசூர் பல்கலைக்கழகம் ஆசிர்வதிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆன்மிகப் பணிகள் மற்றும் மக்களுக்கான தொண்டுகளைச் செய்வதன் மூலம், இந்த இரண்டும் நாணயத்தின் 2 பக்கங்களைப் போன்றவை என்பதை அவர் நிரூபித்து வருகிறார். அவர் தனது வாழ்க்கையை ஏழை மற்றும் கஷ்டப்படும் மக்களின் மேம்பாட்டுக்காக முழுமையாக அர்ப்பணித்துள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *