செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோரின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில்

தொழில் முனைவோரின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி:

கொரோனா பரிசோதனை கருவியை வடிவமைத்த 3 மாணவிகளுக்கு முதல் ரூ.15 ஆயிரம் பரிசு

 

சென்னை, ஜூலை. 21–

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை (புதிய கண்டுபிடிப்பு) சேர்ந்து மாணவர்களுக்கு வியாபார திட்ட யுக்தியை பற்றி ஒரு போட்டியை நடத்தியது.

சிறந்த கொரோன பரிசோதனை கருவியை எலக்ரானிக்ஸ் தகவல்துறை சார்ந்த காயத்ரி, ரஞ்சனா, காயத்ரிபிரியா முன்று மாணவிகள் கண்டுபிடித்தனர் இதன் மூலம் முதல் பரிசு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றனர்.

இண்டலிஜண்ட் ஸ்மார்ட் வாட்ச்சை மெக்கானிக்கல் மாணவர் ராம் திவாகர் மற்று கணினி அறிவியல் மாணவர் நிஷாமர்தூர் கண்டுபிடித்தனர். 2ம் பரிசுத் தொகை ரூ. 10 ஆயிரம் பெற்றனர்.

இந்தப் போட்டியில் 70 வியாபார திட்ட மாடல்களை முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் தாக்கல் செய்தனர். மேலான்மை துறை மாணவர்கள் 70 திட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள் 30 சதவீதத்திற்கும் மேல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கல்லூரி சார்பில் புதிய கண்டுபிடிப்பு, படைப்பாற்றல், காப்புரிமை சம்ந்தபட்ட பலவையான வலைதள கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் சாய்ராம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவினர் 1200 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றுள்ளனர்.

முக்கிய நோக்கம், அனைவரும் வேலை இல்லை வேலை இல்லை என்று சொல்வதை விட வேலை கொடுப்பவர்களாக உருவாக வேண்டும். ஆகையால் மாணவர்கள் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் போதே அவர்களுக்கு தொழில் முனைவோர் என்றால் என்ன, வியாபாரம் என்றால் என்ன, வியாபாரத்தை நீங்கள் எவ்வாறு நடத்த வேண்டும், இதற்கான தகுதிகள் தரம் என்ன வேண்டும், அதனுடைய தலைவர்களுடை தரங்கள் என்ன, என்ன ஆபத்துக்களை பிரச்சனைகள் வியாபாரத்தில் சந்திகின்றனர்,

அதிலிருந்து எவ்வாறு விடுபடுகின்றனர். வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி காண்கின்றனர் என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்கவே இந்தப் போட்டி. தொழில் முனைவோர் பிரிவு தலைவர் மாறன், இ கிளப் தலைவர் முனைவர் திணேஷ்குமார், எச் ஆர் டி இன்னொவேஷன் டாக்டர் ரங்கநாதன், டாக்டர் வாசுதேவன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்தப் போட்டி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *