செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு

Spread the love

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.11-

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், சுவையான பால்கோவாவும்தான். கடந்த 1940–ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்பண்ணை மூலம் பால்கோவா தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கோரி வில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருநெல்வேலி கால்நடை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி சார்பில் கடந்த 2013–ல் விண்ணப்பித்தனர். நீண்ட ஆய்வுக்கு பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு தற்போது புவிசார் குறியீட்டை பெற்று, அந்த மண்ணுக்கு மணம் சேர்த்திருக்கிறது.

பால்கோவா விற்பனையாளர்கள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளில் சுத்தமான பால்கோவா வாங்கிச் செல்லும் மக்கள், அதன் சுவையை அறிந்து பால்கோவாவை கூரியர் மூலம் அனுப்பவும் கேட்டுக்கொள்கிறார்கள். மத்திய அரசு பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் இனி பால்கோவா விற்பனை அதிகரிக்கும். புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருளாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மக்களிடம் சென்றடையும். இதன் மூலம் மேலும் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *