செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச்.13

குற்றாலத்தில் நடிகர் தனுஷ், நடிகை சினேகா ஆகியோர் பங்குபெறும் படப்பிடிப்பினை பார்வையிட்டு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

அவர்களை கோவில் பட்டாச்சாரியர்கள் வரவேற்று ஆண்டாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னாவும் சுமார் அரை மணிநேரம் பயபக்தியுடன் ஆண்டாளை தரிசனம் செய்தனர் தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கிவிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றனர் அங்கு சுவாமி தரிசனம் செய்தனர். சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அவர்களுக்கு ஆசி வழங்கினார்

தொடர்ந்து ஐஸ்வர்யாவும் பிரசன்னாவும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் வருவதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் ஆண்டாள் கோவிலில் படையெடுத்து வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *