செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம், நவ.21 –

காஞ்சீபுரம் மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாபெரும் வெற்றிக்கனியை தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்தியா, மாங்காடு நகர செயலாளர் எம்.பிரேம்சேகர், பாசறை நிர்வாகி எம்.பி.பரத்ராஜ், இருங்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார், போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், வீ.வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *