செய்திகள்

ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை உற்பத்தி துவங்கியது

சென்னை, ஆக.1–

குடிநீர், கழிவு நீர் பைப்கள் தயாரிக்கும் ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை கொரோனா ஊரடங்கு முடிந்து மே மாத முதல் வாரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது. விரைவில் முழு உற்பத்தியில் செயல்படும். செப்டம்பர் மாதத்தில் உற்பத்தித் திறன் உயரும்.

முதல் காலாண்டில் ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை செயல்படாததால் இதற்கு ரூ.10.39 கோடி நஷ்டம் ஏற்பட்டது. முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் இது ரூ.50.24 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

இது தேனிரும்பு பைப்ஸ் 26 ஆயிரத்து 431 டன் அளவு தயாரித்துள்ளது என்று இதன் முழு நேர இயக்குனர் ஜி.எஸ்.ரதி தெரிவித்தார்.

இதன் விரிவாக்கத் திட்டப் பணிகள் 6 மாத காலம் தாமதமாகியது. அடுத்த ஆண்டின் (2021) முதல் காலாண்டில் இந்தப் பணி முடிவடையும். தொடர்ந்து ஆர்டர் பெறுவதுடன், பாக்கியும் வரத் துவங்கியுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *