செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு

Spread the love

வாஷிங்டன்,ஜூன்.6–

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலத்தை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த விண்கலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் கேப் கெனவெரலல் உள்ள விமானப்படை தளத்தில் இதன் என்ஜின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது அதில் இருந்து ஆரஞ்சு வண்ணப்புகை எழுந்ததாகவும், டிராகன் ஒழுங்கற்று இயங்கியதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின்னர், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்க விண்வெளி வீரர்களான பாப் பென்கென் (Bob Behnken), டக்ளஸ் ஹர்லி (Duglus Hurley) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் விண்கலம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *