சிறுகதை

ஸ்பூன் (ராஜா செல்­ல­முத்­து )

நாரா­ய­ண­னுக்குக் கையில் சாப்­பி­டு­வது என்றால் ஒரு அறு­வ­றுப்பு இருக்கும். எப்­போதும் ஸ்பூனிலேயே சாப்­பி­டு­வார்.
‘ஏன் இப்­பிடி எப்பப் பாத்­தாலும் ஸ்பூன்­லயே சாப்­பி­டு­றீங்க’ என்று கேட்டால் அவர் பேசும் வியாக்­யானம் விண்ணை முட்­டும்.
‘ச்சே, அதென்ன கன்ட்­ரி­புரூட்ஸ் மாதிரி கையில சாப்­பிட்­டுட்டு, ஸ்பூன்ல சாப்­பி­டுங்க’ சுத்­தமா சுகா­தா­ரமா இருங்க’ நம்ம ஸ்பூன்ல தான் சுகா­தா­ரமே இருக்கு’ என்று அடிப்­படைத் தத்­துவம் பேசு­வார்.
‘ஏங்க… கையில் சாப்­பி­டு­றது தான் உடம்­புக்கும் மன­சுக்கும் நல்­லது. அத­விட்­டுட்டு ஸ்பூன்ல சாப்­பிட்டா எப்­பிடி? என்று உற­வி­னர்­களோ? நண்­பர்­களோ சொன்னார் இளக்­கா­ரமாய் பேசி எல்லோ­ரை­யும் திட்­டு­வார்.
‘வீட்டில் சாப்­பி­டும்­போது கூட மனைவி சாப்­பாட்டுத் தட்டும் ஸ்பூனும் கரைக்­டாக எடுத்து வைப்பாள். அவர் ஸ்பூனில் சாதத்தை அள்ளிச் சாப்­பிடும் அழகே தனி­யா­னது. அவர் அப்­படி சாப்பி­டு­வ­தை சுற்­றி­யி­ருப்­ப­வர்கள் ஒரு சுற்­றுலா போலவே பார்ப்­பார்­கள்.
‘நா­ரா­யணன்… சாப்­பி­டுற அழகே தனிங்க. மனுசன் கையி­லயே சாப்பிட மாட்­டேங்­கிறார். ஸ்பூன்ல எவ்­வ­ளவு அழகா சாப்­பி­டு­றாரு பாருங்­க’
‘அ­தான்ங்க அவ­ரு­க்கு எந்த நோயும் எட்டி பாக்க மாட்­டேங்­குது. சுத்தம்­னாலும் சுத்தம் அப்பிடியொரு சுத்தம். இது மத்த ஆளு­க­ளுக்­கும் வந்­துச்­சுன்னா இங்க நோய் நொடிங்­கி­றது எதுவும் வரா­துங்க’ என்று நாரா­ய­ண­னுக்கு நற்­சான்­றிதழ் வழங்­கி­னர்.
இதையே தன் டிரேட் மார்க்­காக நினைதுக் கொண்­ட நாரா­ய­ணனும் தன் பந்­தா­வுக்­காக இதையே ஒரு சாக்­காக எடுத்துக் கொண்டு எங்கு சென்­றாலும் ஸ்பூ­னையே தன் பிர­தா­ன­மாகக் கொள்­வார்.
ஒரு நாள் நாரா­யணன் வெளியூர் செல்ல வேண்டி வந்­தது. தன் குடும்பம் சகிதம் வந்தார். பார்க்க வேண்­டிய இடங்­களைப் பார்த்­தார்கள். சுற்ற வேண்­டிய இடங்­களைச் சுற்­றி­னார்கள். எல்லோர் முகத்­திலும் களைப்பும் பசியும் ஒரு சேரப் பற்றிக் கொண்­ட­து.
என்ன சாப்­பி­ட­லாமா? என்­ற­வரின் பேச்­சுக்கு ‘ஆமா’ என்ற தலை­ய­சைப்பும் வாய் நிறையப் புன்­ன­கை­யுமாய் பதில் சொன்னார் நாரா­ய­ணன்.
‘வெஜ்ஜா, நான் வெஜ்­ஜா’
‘வெஜ் தான்’ என்றவரின் பேச்­சுக்கு நாரா­யணன் பதிலும் ஒன்­றா­கவே இருந்­தது? வந்த மொத்தக் குடும்­பமும் மள­ம­ள­வென ஓட்­ட­லுக்குள் நுழைந்­த­னர்.
‘நீங்க என்ன சாப்­பி­டு­றீங்­க?’
‘சாப்­பா­டு’
‘நீங்­க?’
டிபன்
நீங்­க?
‘இட்லி, தோசை’ என்றார் நாரா­யணன்.
ஆர்டர் செய்­யப்­பட்ட ஆட்­க­ளுக்கு அவ­ர­வரின் உணவு வகைகள் உட­னுக்­குடன் வந்து சேர்ந்­தன.
நாரா­ய­ணன் ஆர்டர் செய்த இட்­லியும் அவர் முன்னால் வந்­த­து.
எல்­லோரும் சாப்­பிட ஆயத்­த­மா­னார்­கள்.
‘நா­ரா­யணன் மட்டும் சாப்­பி­டாமல் இருந்­தார்.’
‘சார்’ என்ற சர்­வ­ரிடம்
‘ஸ்பூன்’ என்­றார்.
‘ஓ.கே.சார்’ என்­றவன் ஓடிப் போய்க் கொண்டு வந்­தான்.
ஸ்பூனை எடுத்து லாவ­க­மாகச் சாப்­பிட ஆரம்­பித்­தார்.
‘சாம்பார்… சட்னி’ என்று அவர் ஆர்டர் செய்து கொண்டே சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­தார்.
‘சார், அவரு எப்­பிடி சாப்­பி­டு­றாரு பாருங்க. ஸ்பூன்­ல…
*
மக்கும்… என்று சிலர் சிரித்துக் கொண்டே நாரா­யணன் சாப்­பி­டு­வதைப் பார்த்துக் கொண்டே இருந்­த­னர்.
ஸ்பூனில் இட்­லியை எடுப்­பதும் அதைச் சாப்­பி­டு­வ­துமாய் இருந்­தார்.
‘அ­டுத்து என்ன வேணும்ங்­க’
‘தோசை’ என்றார் நாரா­ய­ணன்.
‘ச­ரிங்க’ என்ற சர்வர் சிறிது நேரத்­திற்குள் அவர் ஆர்டர் செய்த தோசை அவரின் முன்னால் வந்தது. இட்­லியை சாப்­பிட்டு முடித்த நாரா­யணன் அடுத்து தோசைக்குத் தாவி­னார். அது வரை ஸ்பூனில் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­தவர் இப்­போது எப்­பிடிச் சாப்­பி­டுவார் என்று அந்த ஓட்­டலில் இருந்­த­வர்கள் எல்லாம் ஆவலாய்ப் பார்க்க ஆரம்­பித்­தனர். தன்னை யாரும் பார்க்­கிறார்­களா என்­பதைச் சுற்றும் முற்றும் நாரா­யணன் பார்த்துக் கொண்டார். அவர் அப்­படித் திரும்பும் போது டக்­கெனத் திரும்­பி­னார்.
திக்­குத்­தி­ணறி ஸ்பூனில் சாப்­பிட முடி­யாத நாரா­யணன் வேறு வழி­யில்­லாமல் கையில் சாப்­பிட ஆரம்­பித்­தார்.
‘லபக் லபக் லபக்’ என்று கையில் சாப்­பிட ஆரம்­பித்­தார்.
‘யையா… நாரா­ய­ணனா கையில் சாப்­பி­டு­றது எப்­பிடி இருக்கு. தோசையை மெல்­லவும் முடி­யாமல் விழுங்­கவும் முடி­யாமல் திண­றினார் நாரா­ய­ணன்.
பெரிய ஸ்பூன்ல சாப்­பி­டு­றாராம் ஸ்பூனு’ இப்ப தெரி­யுதா? எது நிரந்தரம்னு ஸ்பூன்ல இட்­லிய சாப்­பிட்ட உங்­க­ளால தோசையை சாப்­பிட முடி­யல. ஆனா நம்ம கையில ரெண்­டையும் சாப்பிடலாம். இங்க இயல்பு தான் நிரந்­த­ரம். எதார்த்தம் தான் சுகம். ஊரோடு ஒத்துவாழ்வதுதான் உயர்வு’ என்ற உற­வுக்­கா­ரர்கள் குரல் என்­னவோ செய்­த­து.
அது முதல் அவர் கையில் காயம் பட்டால் கூட ஸ்பூனைத் தொடு­வதே இல்­லை.
‘இப்­போ­தெல்லாம் கையில் சாப்­பி­டு­வது தான் சுகம். சரி’ என்று ஒரு பாடமே எடுத்துக் கொண்டிருக்­கிறார் நாரா­ய­ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *