செய்திகள்

ஸ்புட்னிக்-வி: செப்டம்பர் மாதம் இந்தியாவில் தயாரிக்க ஏற்பாடு

ஐதராபாத், ஆக. 3–

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் துவங்கும் எனவும் அக்டோபரில் கிடைக்கும் எனவும் ரெட்டீஸ் லேபரட்டரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி அனுமதி பெற்றுள்ளது.

அக்டோபரில் கிடைக்கும்

இந்நிலையில், இதன் தயாரிப்பு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்–வி தடுப்பூசி அக்டோபரில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக்–வி தடுப்பூசி, இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு விநியோகித்து வருவதாகவும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *