வர்த்தகம்

ஸ்டேட் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதல் இடம்

சென்னை, மார்ச் 13–

ஸ்டேட் வங்கி தொடர்ச்சியாக 3 மாதங்களாக மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 13.5 கோடி வாடிக்கையாளர்களின் 64 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இந்த வங்கி முதலிடம் வகிக்கிறது.

எஸ்பிஐ தனது டிஜிட்டல் தளங்கள் மூலம் 636 கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. இது வங்கியின் மொத்த பரிவர்த்தனை அளவில் 67 சதவீதம் ஆகும். ஒட்டுமொத்த மொபைல் வங்கிச் சேவைப் பரிவர்த்தனைகளில் எஸ்பிஐ கிட்டத்தட்ட 25 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இதே போன்று இணையதளப் பிரிவில், எஸ்பிஐ இணைய வங்கி சேவை onlinesbi.sbi தளம் பயன்பாட்டின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது, இது 8.5 கோடி வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

எஸ்பிஐ–யின் முதன்மையான டிஜிட்டல் மற்றும் வாழ்க்கை முறை தளமான “யோனோ” தளம் டிஜிட்டல் முறையில் தடையற்ற வகையில் கடன் வழங்கும் முறையை மேம்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனி நபர் கடன்களாக ரூ. 15 ஆயிரத்து 996 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *