செய்திகள்

ஸ்டேட் வங்கி கல்லூரி மாணவர்களுக்கு ‘யோனோ’ வினாடி வினா போட்டி

சென்னை, மார்ச். 1–

ஸ்டேட் வங்கியின் டிஜிட்டல் சேவை தளமான யோனோவை இந்திய இளைஞர்களிடம் நெருக்கமாக கொண்டு செல்லும் முயற்சியாக ஸ்டேட் வங்கி , இந்தியாவின் மிகப்பெரிய வினாடி வினா நிகழ்ச்சியான ‘நியூமரோ யோனோ’வை அறிமுகம் செய்துள்ளது என்று ஸ்டேட் வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்தார்.

இளங்கலை மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும்

இந்த போட்டி, ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள 17 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. சென்னையில் இந்த வினாடிவினா நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ‘நியூமரோ யோனோ’ வினாடிவினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3.72 லட்சத்துக்கான வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

‘நியூமரோ யோனோ’ போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள், https://www.sbinumeroyono.com/ என்ற இணையதளத்துக்குள் நுழைந்து பதிவு செய்து கொள்ளலாம். இதில் மார்ச் மாதம் மும்பையில் நடக்கவுள்ள பிரம்மாண்டமான இறுதிச் சுற்று போட்டியில் 17 நகரங்களைச் சேர்ந்த 17 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இந்த இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.5.85 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

மாணவர்களின் பொது அறிவை சோதித்துப் பார்ப்பதுடன், மிகப்பெரிய அளவிலான போட்டியில் தங்கள் கல்லூரியின் சார்பில் பங்கேற்று அதற்கு பெருமை தேடித்தரும் வாய்ப்பையும் மாணவர்களுக்கு ‘நியூமரோ யோனோ’ வழங்குகிறது என்றார் அவர்.

ஸ்டேட் வங்கியின் டிஜிட்டல் சேவை தளமான யோனோ, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. வங்கி ஒன்றினால் நடத்தப்படும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா 20 வயதுக்கு உட்பட்ட சாதனையாளர்களை கவுரவிக்கிறது என்றார் ரஜினிஷ் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *