செய்திகள்

ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் லோகநாதன் காலமானார்

சென்னை, ஆக.8–

ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் டி.வி.லோகநாதன் காலமானார். இவர் 30 ஆண்டுகளாக தலைவராக இந்த சங்கத்தில் பதவி வகித்ததுடன், அகில இந்திய ஸ்டேட் வங்கி

ஊழியர் பெடரேசன் செயலாளராகவும் பதவி வகித்து பல்வேறு சவாலான பிரச்சினை காலத்தில் சிறப்பாக செயல்பட்டு ஊழியர் நலனுக்கு உழைத்தவர் என்று இந்த சங்க முன்னாள் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் நினைவு கூர்ந்தார்.

ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க சென்னை சர்க்கிள் பொது செயலாளர் ஜி.கிருபாகரன், முன்னாள் தலைவர் டி.வி.லோகநாதன் மறைவு குறித்த அஞ்சலி செய்தியில், ஊழியர்களுக்கு பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்கு அகில இந்திய அளவில் போராடி உரிமைகளை பெற்றுத் தந்தவர் ஆவார். 86 வயதிலும் ஊழியர் நலனுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் டி.வி.லோகநாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டேட் வங்கியில் 1964ம் ஆண்டில் ஏற்பட்ட ஊதிய நிர்ணய போராட்டத்தில் கடுமையாக போராடி வெற்றி பெற்றுத் தந்தவர் ஆவார் என்று ஜி.கிருபாகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *