செய்திகள்

ஸ்டீரியோ ஒலியுடன் விவோ வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்

சென்னை, ஜூலை 21–

விவோ இந்தியா நிறுவனம், பல்வேறு விவோ செல்போன்களை நவீன தொழில் நுட்பத்தில் அறிமுகம் செய்து உள்ளது. விரைவில் பிரீமியம் ரக செல்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இது ‘டீப் எக்ஸ்’ என்னும் நவீன ஸ்டீரியோ தொழில் நுட்பத்தில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்கிறது என்று இதன் டைரக்டர் நிபுன் மரியா தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் ரகங்களில் விவோ முன்னணியில் உள்ளது. இது புதியதாக செல்போனுக்கேற்ற நவீன சாதனங்களை அறிமுகம் செய்கிறது. செல்போன் உப கருவிகளில் நவீன தொழில் நுட்பத்தில் ‘இயர் போனை’ ‘விவோ’ உருவாக்கி உள்ளது. மியூசிக் ஸ்டூடியோவில் உள்ள ஸ்டீரியோ டிஜிட்டல் இசையை நவீன வயர்லெஸ் ஹெட்போன் மூலம் பெற முடியும் என்றார் அவர்.

மேலும் துல்லியமான இரைச்சல் இல்லாத தெளிவான இசை ஒலியை விவோ வயர்லெஸ் ஹெட்போன் வழங்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *