செய்திகள்

ஸ்டாலின் கிரிக்கெட் பால் போட்டால் என்ன ஆகும்? சட்டசபையில் ருசிகரம்

சென்னை, பிப். 12

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிரிக்கெட் பால் போட்டால் என்ன ஆகும் என்று சட்டசபையில் ருசிகர விவாதம் நடந்தது.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

தனது பேச்சை அவர் நிறைவு செய்வதற்கு முன்பு கூறும்போது, இந்த மன்றத்தில் உறுப்பினர் செம்மலை பேசும்பேதும், முதல்வர், அடுத்தடுத்து சிக்சராக அடித்து கொண்டு இருக்கிறார் என்று கூறினார். ஆனால் நான் சொல்கிறேன். எங்கள் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் போடும் கிரிக்கெட் பாலில் கிளீன் போல்ட் ஆக போகிறார் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

அதை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பேசும்போது, உங்கள் தலைவர் ஸ்டாலின் போடும் பால் ‘நோ பாலாக’ போகிறது என்று கூறினார்.

அப்போது அளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. மேலும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது அமைச்சர் பி.தங்கமணி எழுந்து பேசினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மைதானத்தில் இருந்தால்தான் ‘பால்’ போட முடியும். அவர் தான் மைதானத்திற்கே வரபோவதில்லையே என்று கூறினார்.

அப்போதும் அளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *