செய்திகள்

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ தரவரிசையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு

சென்னை, பிப். 12–

கோவிட்‌ (கொரோனா) தொற்று காலத்திற்குப்‌ பிறகு ‘தமிழ்நாடு கடன்‌ உத்தரவாதத்‌ திட்டத்தை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இதன்‌ விளைவாக, குறு, சிறு மற்றும்‌ நடுத்தத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு (இதுவரை, 4,679 கோடி ரூபாய்‌ மொத்தக்‌ கடன்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. ஒது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 203 சதவீதம்‌ அதிகமாகும்‌ என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

புத்தொழில்களையும்‌. புத்தாக்க சுற்றுச்சூழல்‌ அமைப்பையும்‌ வளர்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த அரசின்‌ அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும்‌ வகையில்‌, ஸ்டார்ட்‌ அப்‌ இந்தியா 2022 தரவரிசையில்‌ நம்‌ மாநிலம்‌ ‘‘சிறந்த செயலாற்றும்‌ மாநிலமாகத்‌’’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு இணையவழி தற்சார்புத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தை’ தொடங்கியுள்ளது. உணவு விநியோகம்‌, வாடகைப்‌ பயணம்‌ போன்ற இணையவழி அடிப்படையிலான ஒருங்கிணைப்புத்‌ தளங்கள்‌ மூலமாகப்‌ பணியாற்றும்‌ 1 லட்சத்திற்கும்‌ அதிகமான அமைப்புசாராத்‌ தொழிலாளர்களின்‌ நலனை இந்த வாரியம்‌ பாதுகாக்கும்‌.

இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *