சினிமா

‘ஸ்டண்ட் நடிகர்’ அதிரடி அரசு: ‘கபடி வீரன்’ ஹீரோ

சென்னை, ஜன. 31–

‘கபடி’ படத்தின் ஹீரோ ஸ்டண்ட் நடிகர் அதிரடி அரசு. மிகுந்த தைரியசாலி. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடகாவில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு திடீரென கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட வன்முறை கும்பல் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர். அப்போது சட்டென்று குறுக்கே பாய்ந்து, தான் கத்திக்குத்தை வாங்கி ரஜினியின் உயிரைக் காப்பாற்றியவர் அதிரடி அரசு’ என்று அவரை மேடையில் அறிமுகம் செய்தார் தயாரிப்பாளர்கள் ‘கில்டின்’ தலைவர் ஜாக்குவார் தங்கம்.

‘ரிஸ்க்’ எடுப்பது என்றால் அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல். ஸ்டண்ட் காட்சிகளில் நாம் சொல்லி முடிக்கும்போதே விஷயத்தை செய்து முடித்துவிடும் மின்னல் வேகம் அவருக்கு உண்டு. என்றும் சர்டிபிகேட் கொடுத்து வாழ்தினார்.

கதை – திரைக்கதை – வசனம் – பாடல்கள் – ஒளிப்பதிவு – டைரக்ஷன் தயாரிப்போடு நடித்திருக்கிறார் ஹீரோவாக.

விழாவில் கே.பாக்யராஜ், எம்.ஆர்.ஆர்.ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், நமிதா, விஜயமுரளி, பெரு. துளசி பழனிவேல் உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

மக்கள் தொடர்பாளர் பிரியா, நிகழ்ச்சி வர்ணனையாளர் டிவி புகழ் அர்ச்சனா அனைவரையும் வரவேற்றனர். முடிவில் அதிரடி அரசின் தாயார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *