செய்திகள்

ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: டாக்டர் சஸ்பெண்ட்

மதுரை, டிச. 6–

மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 26 வயது இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி டாக்டர் ஒருவர் ஸ்கேன் செய்வதாக கூறி அந்த பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் மீண்டும் பரிசோதனைக்காக வந்த அந்தப் பெண்ணிற்கு, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இளம்பெண் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் ரேடியாலஜி துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த டாக்டரை சஸ்பெண்ட் செய்து அரசு மருத்துவமனை டீன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *