வாழ்வியல்

வைட்டமின் டி , ஈ, கே சத்து கிடைக்க சாப்பிடவேண்டிய உணவுப் பொருள்கள்

நமது உடலுக்கு வைட்டமின் டி , ஈ, கே ஆகிய சத்துக்கள் கிடைக்க சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

வைட்டமின் ‘டி’யின் நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.

சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ உற்பத்தியாகத் தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறலாம்.

வைட்டமின் ‘ஈ’யின் நன்மைகள்: ரத்த சுழற்சியைச் சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைப் பாதுகாக்கும்.

சாப்பிட வேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘கே’யின் நன்மைகள்: ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளைச் சீராக்குகிறது.

சாப்பிட வேண்டிய பொருட்கள்: பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பிராக்கோலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *