வாழ்வியல்

வைட்டமின் ஏ, பி, சி இருக்கும் உணவுப் பொருட்கள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும் தாதுக்களும் அவசியமான ஊட்டச் சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

வைட்டமின் ‘ஏ’யின் நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

வைட்டமின் ஏ பெற சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

வைட்டமின் ‘பி’யின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக் கிழங்கு, வாழைப் பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

வைட்டமின் ‘சி’யின் நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *