செய்திகள்

வைகுண்ட பெருமாள் கோவில் கருடசேவை

Spread the love

காஞ்சீபுரம், ஜூன் 1–-

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த மே 29ம் தேதி அதிகாலை மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி பகல், இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

நேற்று முக்கிய உற்சவமான கருட வாகனத்தில் பெருமாள் உற்சவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது, அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘‘கோவிந்தா… கோவிந்தா… வைகுண்ட பெருமாளே… வைகுண்ட பெருமாளே…’’ என்று பக்தி கரகோஷம் எழுப்பினர்.

பிறகு கருட வாகனம் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூர தீபாராதனை காட்டி நாட்டு சர்க்கரை வழங்கினர்.

இந்த வைபவத்தில் ஆன்மீக பிரமுகர்கள் ஆர்.வி.ரஞ்சித்குமார், வி.கே.தாமோதரன், எம்.எஸ்.பூவேந்தன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் அதிபர்கள் சுந்தர், பச்சையப்பன் என்கிற பிரபு, தொழிலதிபர்கள் வடகால் ஆர்.சவரிங்கம், மாலோலோ வாசுதேவன், வக்கீல் ரேவதி, அரசு வழக்கறிஞர் ஜெ.காமேஷ்குமார், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, பாஸ்போர்ட் பிரவின், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ந.தனபால், காஞ்சீபுரம் உதவி ஆணையர் க.ரமணி, கோவில் செயல் அலுவலர் ஆ.குமரன் மற்றும் கோவில் பணியாளர்கள், நகர்வாழ் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *