செய்திகள்

வேளாண் இயந்திர வாடகை மையம்: அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூர் மாவட்டத்தில்

வேளாண் இயந்திர வாடகை மையம்:

அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

 

திருவாரூர், ஜூன் 14–

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திர வாடகை மையத்தினை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பிரதாமராமபுரம் ஊராட்சியில் ஊராட்சிய அளவிலான குழுக் கூட்டமைப்பு மூலம் செயல்படும் வாடகை வேளாண் இயந்திர மைய திறப்பு விழா கூடுதல் கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வேளாண் இயந்திர மையத்தை திறந்து வைத்து வேளாண் இயந்திரங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அந்தவகையில் விவசாயகளுக்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதால் விவசாயிகளால் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தப்பட்டு முதலமைச்சருக்கு காவேரி காப்பாளன் என்ற பட்டத்தையும் வழங்கினார்கள்.

முதலமைச்சர் ஜீன் 12–ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்தார். சென்ற ஆண்டு நல்ல விளைச்சல் காணப்பட்டது போலவே இந்தாண்டு நல்ல விளைச்சல் காண வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் திட்டப்பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதுவரை 90 சதவீதம் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர்,பவர்டில்லர்,நடுவு இயந்திரங்கள் தடையில்லாமல் கிடைக்க வேளாண்மைத்துறை துறை அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2019-–20 ஆம் நிதியாண்டில் குடவாசல் வட்டாரத்திற்கு 3 ஊராட்சிகளிலும், கொரடாச்சோி வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும், நன்னிலம் வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும் ஆகக் கூடுதல் 9 ஊராட்சிகளில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்பட்டு இன்றையதினம் தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்வாடகை இயந்திர மையங்கள் மூலம் உழவு இயந்திரம் களையெடுக்கும் இயந்திரம், கைத்தௌிப்பான், மின்கலம் தௌிப்பான் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவை வாடகைக்கு விடப்படும். வாடகை இயந்திர மையங்களில் உழவு இயந்திரம் (பவர் டில்லர்) ஏக்கருக்கு ரூ.2000 என்ற வீதத்திலும், களையெடுக்கும் இயந்திரம் மணிக்கு ரூ.100 என்ற வீதத்திலும், கைத்தௌிப்பான் மற்றும் மின்கலம் தௌிப்பான் ஆகியவை மணிக்கு ரூ.50 என்ற வீதத்திலும் வைக்கோல் கட்டும் இயந்திரம் மணிக்கு ரூ.100 என்ற வீதத்திலும் மகளிர் குழுக்கூட்டமைப்பால் வாடகைக்கு விடப்படும்.

விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திர வாடகை மையத்தினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, உதவி திட்ட அலுவலர் காமராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தென்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *