திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரத்தில் கரும்பு ஜூஸ் கடை உரிமையாளர், ரூ.18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வைத்துள்ளார். “பிஇ, பிஎஸ்சி, பிஏ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்” என்று பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவால் பட்டதாரிகள் பலர் திண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், இளைஞர்கள் தங்களுக்கு தகுந்த வேலைக்கு தான் செல்வோம் என்கிறார்கள். இதனால் வெளிமாநில இளைஞர்கள் தமிழகத்தில் வேலைகளை பிடித்து வருகின்றனர்.
கரும்பு ஜூஸ் கடை உரிமையாளர் இதனை, இளைஞர்களிடம் எந்த வேலை கிடைத்தாலும் செய்வோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கரும்புச் சாறு பிழிய ரூ.18 ஆயிரம்: இணையத்தில் வைரலாகும் விளம்பரம்