செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்:

காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா தகவல்

காஞ்சீபுரம், ஜூன் 30–-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்ந்து உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு நிதியாண்டின் துவக்கத்தில் பணியில் இல்லை என தெரிவிக்கும் வகையில் சுய உறுதிமொழி ஆவணத்தை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் – 23 முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காரணத்தால், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறும் பயன்தாரர்கள் ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்திற்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் சுயஉறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கி அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

இக்கால அவகாசத்தில், சுயஉறுதிமொழி ஆவணம் பெறப்பட்ட பின்னரே தொடர்ந்து உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *