சிறுகதை

வேலைஇல்லாதவன் – எம்.பாலகிருஷ்ணன்

பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் கொந்தளித்தவனாக இருப்பான் கோவிந்தன். பின் இருக்காதா?

கோவிந்தனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவனிடம் இரண்டு இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டவனாச்சே.

பெருமாள் அரசாங்க அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறான். இவன் கோவிந்தனுக்கு ஆசை வார்த்தைகள் கூறினான்.

உனக்கு கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன். அதுக்கு நான்கு இலட்சம் செலவாகும் என்றுக் கூற

கோவிந்தனும் அவன்கூறிய வார்த்தைகளை நம்பி பெருமாளிடம் முன் பணமாக இரண்டு இலட்சம் கடன் வாங்கிக் கொடுத்தான். அதை பெற்றுக் கொண்ட பெருமாள்

இரண்டு வருடங்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. . அதனால் கோவிந்தன் பெருமாள் மீது கடுமையான கோபத்தில் இருந்தான்

ஒரே தெருவில் குடியிருப்பவர்கள் ; இரண்டு பேருக்கும் திருமணமாகி குழந்தைகளோடு இருப்பவர்கள்; தினந்தோறும் சந்திப்பவர்கள்.

கோவிந்தன் பெருமாளை நம்பி பணம் கொடுத்து ஏமார்ந்து போனவன்தான். இவன் ஒரு தனியார் கம்பெனியில் சின்ன வேலை பார்ப்பவன். அரசாங்க வேலை பார்த்தால் கைநிறைய சம்மளம் வாங்கலாம் என்ற ஆசையில் இருந்தான்.

அந்த நேரத்தில் பெருமாளின் நட்பு கிடைத்தது. அவன் ஆசையை பெருமாள் பயன்ப டுத்திக் கொண்டான்.

கோவிந்தா உனக்கு ரெண்டே மாசத்தில் அரசாங்க ஆபிஸ்ல முதல்ல ஒப்பந்த வேலை வாங்கித் தர்றேன். அதுக்கப்புறம் அரசாங்க வேலை வாங்கித் தர்றேன் என்று பெருமாள் சொல்லவும்

அதற்கு கோவிந்தன் எனக்கு ஒப்பந்த வேலையெல்லாம் வேண்டாம் நிரந்தரப் பணியாய் அரசாங்க பணி தான் வேண்டும் என்று சொன்னான்.

அப்படியென்னா நாலு இலட்சம் ஆகும்; பல பேர்க்கு பணம் கொடுக்கணும்;

‘‘சரி பணம் தர்றேன்’’.

முதல்ல ரெண்டு இலட்சம் கொடுத்தான்.

நீ கொடுத்த பணத்தை அவங்ககிட்ட கொடுத்துட்டேன் என்றும் உன்னுடைய போட்டோ பேப்பர் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டேன் என்றும் சொன்னான்.

இதை நம்பிய கோவிந்தன் பல மாதங்களாகப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஒருநாள் கோபமாக என்ன இவ்வளவு மாசம் ஆச்சி இன்னும் வேலை வர்லையே ஏன்? என்றுக் கேட்டான்.

பெருமாளும் வழக்கம் போல பதில் சொல்ல இரண்டு பேர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

கோவிந்தன் கடைசியாக போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தான். பிறகு போலீசார் இரண்டு பேர்களை விசாரித்தனர்.

பணம் கொடுத்து ஏமார்ந்த கோவிந்தனுக்கு ஒரு மாசத்துக்குள் பெருமாள் கோவிந்தனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமென்று போலீசார் கூறினார்.

அப்படி இல்லையென்றால் பெருமாள் வேலை பார்க்கும் அதிகாரிகளிடம் தகவல் சொல்லப்படும் என்றும் போலீசார் கூறினர்.

பெருமாளிடம் போலீசார் சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது இன்னும் கோவிந்தனிடம் வாங்கிய பணத்தைப் பெருமாள் கொடுக்கவில்லை.

அதனால்தான் இன்று கோவிந்தன் பெருமாளை பார்த்துக் கோபப்பட்டான்.

கோவிந்தன் ஒரு முடிவுக்கு வந்தான் பெருமாள் போலீசார் சொல்லியும் பணத்தைத் தராமல் இருக்கான். முதலில் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் புகார் செய்வோம். அப்பத்தான் நம்ம பணம் கைக்கு கிடைக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு கோவிந்தன் வேகமாக போலீஸ். ஸ்டேசனை நோக்கி விரைந்தான்

போலீஸ் ஸ்டேசனில் உள்ளே இன்ஸ்பெக்டர் இருந்தார். அப்போது கோவிந்தன் அவரிடம்

சார் வேலை வாங்கித்தருவதாக சொல்லி என்னை ஏமாத்துன பெருமாள் இன்னும் எனக்குப் பணம் கொடுக்கல என்று சொன்னான்.

இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் அப்படியா இன்னும் உனக்கு பணம் தரலையா அவனை சும்மாவிடக் கூடாது இப்ப அவன் எங்கே இருக்கான் ? என்று கேட்டார்

அதற்கு கோவிந்தன் ‘‘சார் பெருமாள் வீட்டிலதான் இருக்கான் ’’என்றான்.

சரி வா அவன் வீட்டுக்கு போவோம் என்று இன்ஸ்பெக்டர் கோவிந்தனைக் கூட்டிக் கொண்டு பெருமாள் வீட்டை நோக்கிச் சென்றார்.

இன்ஸ்பெக்டர் தமது இருசக்கர வண்டியில் செல்ல கோவிந்தனும் அவரைப் பின் தொடர்ந்தான்.

பெருமாளின் வீட்டை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் டேய் பெருமாளு என்று குரல் கொடுத்தார்.

வெளியே யாரும் வரவில்லை; அதனால் இன்ஸ்பெக்டர் மறுபடியும் குரல் கொடுத்தார். அப்போது வீட்டில் இருந்து பெருமாளின் மனைவி அழுது கொண்டே வெளியே வந்தாள்.

ஏம்மா அழதுட்டு வர்றே உன்னோட வீட்டுக்கார் எங்கே என்றுக் கேட்டார்

அதற்கு பெருமாளின் மனைவி கண்களை துடைத்துக் கொண்டு அந்தக் கொடுமையை ஏன் சார் கேட்குறீங்க இந்தா நிக்கிறாரே கோவிந்தன் இவருகிட்ட வாங்குன பணத்தைக் கொடுக்க யாருகிட்டையோ கடன் கேட்டாராம். கடன் கிடைக்கலையாம்

இன்னிக்கிகுள்ள பணம் கொடுக்கனுமுன்னு நீங்க சொன்னீங்களாம். அதுக்கு பயந்துகிட்டு என்னோட மூக்குத்தி தாலிச்செயினு எல்லாத்தையும் கழட்ட சொன்னாரு. நான் மாட்டேன்னுசொன்னதுக்கு என்னை அடிச்சி நகைகளை பிடிங்கி அடவுவச்சி கொடுக்க அடவு கடைக்கு போயி இருக்காருஎன்று அழுதுகொண்டே பேசினாள்

அதிர்ச்சியடைந்த கோவிந்தன் நீங்க போட்டிருந்த நகைகளை வச்சாபணத்தை கொடுக்கப் போறாரு

பெருமாள் போயி எவ்வளவு நேரம் ஆச்சி என்று இன்ஸ்பெக்கர் கேட்டார்.

அரை மணிநேரம் இருக்குமய்யா என்று பதிலுரைத்தாள்

‘‘சரி பெருமாள் வந்தா அவன ஸ்டேசனுக்கு வரச்சொல்லும்மா என்றுக் கூற

அதற்கு அவள் சரிங்கய்யா. அவரு வந்தவுடனே ஸ்டேசனுக்கு வரச்சொல்லுறேன் என்று அவள் கூறிமுடிப்பதற்குள் பெருமாள்

வேகமாக வந்து கொண்டிருந்தான்.

வீட்டுவாசலில் இன்ஸ்பெக்டரும் கோவிந்தனும் நின்றுகொண்டிருந்ததை பெருமாள் பார்த்ததும் தன்னைத்தான் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று மனதில் நினைத்தவாறு அவர்கள் அருகில் வந்துநின்றான்.

அய்யா கோவிச்சிக்காதீங்க நான்அடவுகடைக்கு போய் நகைகளை அடவு வச்சிகையிலிருந்த பணத்தைசேர்த்து கோவிந்தனுக்கு கொடுக்க ஒருஇலட்சத்தை தேத்திட்டேன். இன்னும் ஒரு இலட்சம் மட்டும் இருக்கு அதை சீக்கிரமாக் கொடுத்துடுறேன் என்றவாறே பெருமாள் இன்ஸ்பெக்டரிடம் பணத்தைக் கொடுக்க

அப்போது அவர் பணத்தை கோவிந்தன்கிட்ட கொடு என்று சொல்ல

உடனே கோவிந்தன் அய்யா இந்தப் பணத்த வாங்க எனக்கு விருப்பமில்லங்கய்யா என்றான்.

ஏன் பணத்தை வாங்கமாட்டேன்கிறாய் கோவிந்தா என்று இன்ஸ்பெக்டர் கேட்க

அதற்குஅவன் ‘‘அய்யா பெருமாளு எனக்கு பணம் கொடுக்க வேண்டியதிருந்தாலும் அவன் மனைவியோட தாலியை அடவு வச்சிக் கொடுக்குறது என்னோட மனசு ஏத்துக்கமாட்டேன்குது. அதுவும் மனைவியை அழவச்சி எனக்குக் கொடுக்கிறது நான்விரும்பல

அவன் என்னை மாதிரி சின்னகுழந்தைகளை படிக்கவைக்கிறான். படிப்போடசெலவும் கெடக்கூடாது.

முதல்ல பெருமாளு மனைவியோட அடவு வச்ச நகைகளை உடனே திருப்ப இந்த ஒரு இலட்சத்தக் கடைக்கு கொண்டுபோகச் சொல்லுங்கய்யா.

மனைவி நகைகளை வாங்கிட்டு அவங்களைக் கழுத்துல போடச் சொல்லுங்கய்யா .

எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக இனிமே மனைவி தாலிச் செயினு அடவு வக்க வேண்டாமுன்னு சொல்லுங்கய்யா.

என்னோட பணத்தை மெதுவா கொடுத்தாபோதும் என்று உருக்கமாக கோவிந்தன் பேசியதும் பெருமாள் உணர்ச்சி பெருக்கால் கோவிந்தனைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தான்.

‘‘இவ்வளவு நல்லமனசுக்காரனை புரிஞ்சிக்காம இருந்துட்டேனே.வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி உன்னை போயி ஏமாத்திட்டேன் என்னைநினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு என்னை மன்னிச்சிடுப்பா கோவிந்தா

உன்கிட்ட வாங்கின பணத்தை எவ்வளவு சீக்கிரமா கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் கொடுக்கிறேன்பா’’என்று மனமுருகப் பேசினான் பெருமாள்.

கோவிந்தன் பெருந்தன்மையுடன் தலையாட்டுவதைக் கண்டு இன்ஸ்பெக்டர் நெகிழ்ந்து போனார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *