வேலூர், ஜன: 13–
வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவர் தேர்தலில் அண்ணா தி.மு.க. வை சேர்ந்த எஸ்.ஆர்.கே.அப்பு வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு அமைப்புக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சிறப்பு அதிகாரி நரசிம்ம ரெட்டி தலைமையிலும், செயலாளர் எஸ்.ராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.குப்புசாமியும் போட்டியிட்டனர். இதில் இயக்குனர்கள் ஸ்ரீசைலம், செல்வம், பாஸ்கர், ரவி, குருவையன், சாம்ராஜ், தங்கராஜ் சரவணன், சண்முகம் ஆகியோர் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். இறுதியில் தேர்தல் அதிகாரி நரசிம்ம ரெட்டி எஸ்.ஆர்.கே.அப்பு தலைவராகவும், துணை தலைவராக எஸ்.குப்புசாமி, வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட எஸ்.ஆர்.கே.அப்பு பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வேளாண்மை துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு, விவசாய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருவதை யாரும் அறிவோம். இந்த நிலையில் வேளாண்மை விலை பொருட்கள் சீரான முறையில், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க அரசு அறிவுறுத்தலின்படி செயல்படுவேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் த.வேலழகன், வேலூர் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அமர்நாத், மாவட்ட பேரவை செயலாளர் ராகேஷ், ஐ.டி மாவட்ட செயலாளர் ஜனனி சத்திஷ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம். ஆனந்தன், இளைஞர் அணி துணைத் தலைவர் புகேழந்தி, அறங்காவலர் துறை ஜெயபிரகாஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ஏ.ஏ.தாஷ், ஏ.பிஎல்.சுந்தரம், பாசறை வினாயகமூர்த்தி .மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் எஸ்.இராஜேந்திரன் முன்னால் நகர கழக செயலாளர் ரேணுகோபல் சேவூர் இராஜேந்திரன் உள்பட பலர் பூச்செண்டுகளையும், சால்வைகளையும் அணிவித்து வாழ்த்தினர்.