செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள்: நீர்வள மேலாண்மை இயக்குநர் சத்யகோபால் ஆய்வு

வேலூர், ஜூலை 8–

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு நீர்வள மேலாண்மை இயக்குநர் கொ.சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறு சீரமைப்பு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கொ.சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பேர்ணாம்பட்டு வட்டம், ரெட்டிமாங்குப்பம் ஏரியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளில் மண் தூர்வாரப்பட்டு கரைகளை பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் ஏரிகளில் எல்லை கற்கள் நடப்பட்டு இருப்பதையும் ஏரியின் உள்வரத்து வௌி வரத்து கால்வாய்களில் மண் தூர்வாரப்பட்டுள்ளதையும் ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மலட்டாற்றிலிருந்து ரெட்டிமாங்குப்பம் ஏரிக்கு தண்ணீர் செல்ல தடுப்பு கால்வாய்கள் அமைத்து உள்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்ல தூர்வாரப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டும் பின்னர் பேர்ணாம்பட்டுலிருந்து குடியாத்தம் மேல்பட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள நீர் உள்வரத்து கால்வாயினை ஆய்வு செய்தும் உள்ளி மேம்பாலம் அருகே கூடாநகர் ஏரிக்கு வரும் உள்வரத்து கால்வாய்களில் மண் தூர்வாரப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டும் அணைக்கட்டு வட்டம், புத்தூர் ஏரியில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து நீர்வள ஆதார மேலாண்மை இயக்குந கொ.சத்தியகோபால் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் 2020-–2021-ஆம் நிதியாண்டில் 14 ஏரிகளில் தூர்வாரும் பணிகளுக்காக 4.69 கோடி மதிப்பீட்டில் சுமரர் 1272.83 ஹெக்டேர் பாசன நிலம் பயன் பெறும் வகையில் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 14 ஏரிகளில் 17.91 கி.மீ. கரைகளை பலப்படுத்தவும் 103.89 கி.மீ. கால்வாய்களை தூர்வாரவும் 23 மதகுகளை பழுது பார்க்கவும் 2 மதகுகள் மறு கட்டுமானமும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஆக்கரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க அமைவதோடு நீரினை முழு அளவில் சேமித்து விவசாயப் பயன்பாட்டிற்காக உபயோப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மழை நீரை சேமித்து குடிநீர் தட்டுபாடு இல்லாமல் கிராம மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டமாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாய்வின் போது பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் எம்.சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் கோபி, தமிழ்செல்வன், விவசாயச் சங்கத்தலைவர் ஆர்.டி.பாலாஜி, செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் குருசாமி மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *