வேலூர், செப் 10
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் வே.இரா. சுப்புலெட்சுமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா (போஷன் மா) செப்டம்பர் 01 முதல் 30 வரை வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து அங்கன்வாடி மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்பு தலைப்பில் இந்த தேசிய ஊட்டசத்து மாத விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த வருடம் செப்டம்பர் 2024 மாதத்தில் :
1.இரத்தசோகை தவிர்த்தல், 2.குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்தல், 3.சரியான நேரத்தில்,சரியான அளவில் இணை உணவு, 4.முன்பருவக் கல்வியை மேம்படுத்துதல், 5.சிறந்த நிர்வாகத்திற்கான மற்றும் வெளிப்படை தன்மைக்கான தொழில்நுட்பம், 6.ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுதல்” என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னர் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு நிகழ்வாக ஊட்டச்சத்து மாத உறுதிமொழியை (போஷன்) மாவட்ட கலெக்டர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் மாவட்ட அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் செல்வி சாந்தி பிரியதர்ஷனி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுஜாதா, மைதிலி, சமீனா ரிகான், சந்திர இலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், திட்ட உதவியாளர் சவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.