செய்திகள்

வேலூர் மத்திய சிறையில் செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல்

வேலூர், ஜூன் 8–

வேலூர் மத்திய சிறையில் செல்போன், சிம் கார்டு, பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சிறை அலுவலர் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 7-வது பகுதி கழிவறையில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், சிம் கார்டு மற்றும் பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.