வேலூர், ஜன 16–
பொங்கல் திருநாள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனரும் தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத் பொங்கலிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழர்களின் பாராம்பரிய கலைகளான கும்மியடித்தல், உரியடத்தில், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு கடிக்கும் போட்டிகள் உள்ளிட்டவை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் ஜி.வி. சம்பத் பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவில் பங்கேற்க உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் சொந்த ஊருக்கு வருகை தந்து உற்றார் உறவினர்களுடன் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இவ்விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.