செய்திகள்

வேலூர் தன்வந்திரி பீடத்தில் 14–ந் தேதி பாதாள சொர்ண சனீஸ்வரர், லக்ஷ்மி வராஹர் ஆலய கும்பாபிஷேகம்

Spread the love

வேலூர், ஜூன். 12–

வேலூர் தன்வந்திரி பீடத்தில் 14–ந் தேதி பாதாள சொர்ண சனீஸ்வரர், லக்ஷ்மி வராஹர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாபங்கள் நீங்கி சுபிக்ஷங்கள் பெற பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வேண்டும் வரங்கள் தரும் லக்ஷ்மி வராஹருக்கும் மஹா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (14–ந் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணி முதல் சுற்றுபுற நகர-கிராம மக்களின் பரிபூரண ஒத்துழைப்புடனும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படியும் தவத்திரு இரத்தினகிரி பாலமுருகன் அடிமை, ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா, கலவை தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள், மஹாதேவமலை ஸ்ரீ மஹாதேவ சித்தர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

மேலும் இவ்விழாவிற்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவேஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றநீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி,தொழில் நலத்துறை ஆணையர் ஆர்.நந்தகோபால், இராணிபேட்டை கோட்டாச்சியர் K.இளம்பகவத், மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப் குமார், இராணிபேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், ஆர்.வி.எஸ். சேர்மன் குப்புசாமி கோவை, ஈரோடு ஸ்ரீஅம்மன் டிரஸ்ட் டி.ஜெயலக்ஷ்மி, சென்னை ரெப்கோ வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.வரதராஜன், சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொதுமேலாளர் ஆர்.குமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *