…
வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த முகுந்தனின் மனதில் கண்ணீர் கசிந்தது.
கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் மாடி வீடுகள் அடுக்கடுக்காய் காட்சி தந்தது பசுமை மரங்கள் பார்க்க இயலவில்லை.
காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு நாடுகளாய் உருவெடுத்திருந்தது; கேட்டால் நாடு முன்னேறி
விட்டது; நகர் மயமாகி விட்டது என்கிறார்கள்.
குடிக்கும் தண்ணீர் பாக்கெட்டில் விற்கப்படுகிறது.
உயிர்வாழ சுவாசிக்க நல்ல காற்று கிடையாது. எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் பெருக்கம்.
இந்த நவநாகரீக வாழ்க்கை முகுந்தனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பழைய நினைவுகள் மனதிற்குள் ஓடியது.
தாத்தாவின் தோட்டத்தில் குற்றாலம் போல் தொட்டியில் குதிக்கும் தண்ணீரில் தலையை கொடுத்து, முதுகையும் கொடுத்து ஒத்தடம் போல் உடம்பு வலி நீங்கிய குளியல்கள் இப்பொழுது எங்கே?
எல்லாம் நகரம் ஆகிவிட்டது; தண்ணீர் பக்கட்டுக்குள்ளே குளித்தாக வேண்டியதாயிற்று. மனைவியோ பார்த்து செலவு செய்யுங்கள் தண்ணீரை என்கிறாள்.
அதிகாலையில் ராகி கூழில் தயிர் ஊற்றி கடிக்க மிளகாய் வத்தல், இடித்த மாங்காய் வாயில் சப்புக் கொட்ட நீர் சொட்டும் ஆயாவின் கைப்பக்குவம் அப்படி…..
இன்றோ பாஸ்ட்புட் என்று எதை எதையோ கலந்து ஆயுளை குறைக்கும் வண்ணப் பொடியில் உணவு பரிமாற்றங்கள்.
எங்கும் ஆற்றில் நண்பர்கள் உடன் மீன் பிடித்து சுட்டு சாப்பிட்ட அந்த அனுபவங்கள் இன்று இல்லை.
சுவையற்ற ஐஸ் மீன்களை வாங்கி சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
அன்று கலப்படம் இல்லாத வாழ்வு; இன்று எல்லாவற்றிலும் கலப்படம்.
அன்று வறுமையிலும் இனிமை; பாசத்திற்கு பஞ்சமில்லை;
இன்று எங்கும் எதிலும் வேஷம்; என்னையே நான் திரும்பிப் பார்த்தேன்; நானும் நவநாகரீகம் எனும் பெயரில் வேடதாரிகளில் ஒருவனாக பயணித்துக் கொண்டிருந்தேன்.
என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
அடிக்கடி பழைய மனிதனை திரும்பி பார்த்தாலும் மீண்டும் புதிய மனிதனுக்குள் புகுந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அப்படி இல்லாவிட்டால் என்னை வேற்றுகிரகவாசி என ஒதுக்கி விடுவார்கள்.