செய்திகள்

வேப்பேரியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, நவ. 26:

வேப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேப்பேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புரசைவாக்கம், தானா தெரு, ஆவின் பூத் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த சுதர்சன், தேவ் ஆனந்த் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.19 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் மேற்படி மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *